வேயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேயங்கொட புகையிரத நிலையத்தில் நபர் ஒருவர் புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீரிகமயில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
ரம்புக்கன, நவகமுவ பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வேயங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

