கைவிடப்பட்ட 24 மணிநேர புகையிரத தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு!

239 0

புகையிரத தொழிற்சங்கத்தினர் ஒவ்வொரு வியாழக்கிழமையும் முன்னெடுத்து வரும் 24 மணிநேர பணிப்பகிஷக்கரிப்பு போராட்டத்தினை கைவிட்டுள்ளனர்.

புகையிரத தொழிற்சங்கத்தினரின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட மேலும் பல விடயங்களை முன்னிலைப்படுத்தி கடந்த மாதம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பில் அரசாங்கம் எவ்வித பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்காததன்  காரணமாக  ஒவ்வொரு  வியாழக்கிழமை  நள்ளிரவு  தொடக்கம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு  வரை 24 மணிநேர  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்படத் தீர்மானித்தனர்.

இதேவேளை அரசாங்கம் புகையிரத சேவையினை அத்தியாவசிய சேவையாக்கி வர்த்தமானி வெளியிட்டது.

இந் நிலையிலேயே இன்றைய தினம் புகையிரத தொழிற்சங்கத்தினர் ஒவ்வொரு வியாழக்கிழமைதோறும் முன்னெடுக்க தீர்மானித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போரட்டத்தினை கைவிட்டுள்ளனர்.

அத்துடன் புகையிரத தொழிற்சங்கத்தினரின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் அனைத்து புகையிரத தொழிற்சங்கத்தினரும் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.