20 வருடங்களால் முடியாததை 4 வருடங்களில் முடித்தோம்-தலதா

342 0

கடந்த 20 வருடங்களாக செய்ய முடியாத விடயங்களை இந்த 4 வருடங்களுக்குள் செய்து முடித்ததாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்  அதுகோரல தெரிவித்துள்ளார்.

கஹவத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த காலத்தில் இருந்து பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்தாகவும் அவற்றை அரசாங்கம் வெற்றிகரமான முறையில் முகங்கொடுத்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கடந்த வருடம் பலவந்தமாக ஆட்சியை பிடிக்க முற்பட்ட போதும் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட்டதனால் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.