ஹிட்லர் வாழ்ந்த வீடு இடித்து தள்ளப்படுகிறது

295 0

201610190545128865_adolf-hitler-birth-house-to-be-demolished_secvpfஇரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மனியின் சர்வாதிகாரியாக திகழ்ந்தவர் ஹிட்லர். அவர் பெயரைக்கேட்டாலே அந்த காலகட்டத்தில் உலகமே பயந்தது. அவர் பிறந்து வளர்ந்த வீடு, ஆஸ்திரியா நாட்டில் பிரனவ் நகரில் உள்ளது.

இந்த வீட்டை இடித்து தள்ளிவிட ஆஸ்திரிய அரசு இப்போது அதிரடியாக முடிவு எடுத்துள்ளது.

இதுபற்றி அந்த நாட்டின் உள்துறை மந்திரி வோல்ப்காங் சொபோட்கா கூறும்போது, ‘அந்த கட்டிடத்தை முழுமையாக மறுவடிவமைப்பு செய்ய வேண்டி உள்ளது.
அது மட்டுமின்றி அந்த வீடு அங்கீகாரம் பெறுவதையும், அடையாளப்படுத்தப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டி இருக்கிறது’ என்றார்.

ஆஸ்திரிய அரசு நியமித்த ஒரு ஆணையத்தின் முடிவின்பேரில்தான், ஹிட்லரின் வீட்டை இடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஹிட்லரின் வீடு நாஜி கட்சி ஆதரவாளர்களின் புனித தலம் போல மாறி வருவதை தடுக்கத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கான முடிவை அந்த நாட்டின் பாராளுமன்றம் சட்டமாக இயற்ற வேண்டும்.

ஹிட்லரின் வீட்டை இடித்து தள்ள வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூறும்போது, ‘ஹிட்லர் வாழ்ந்த வீடு, பாதுகாக்கப்பட வேண்டும். அவரோடு தொடர்புடைய ஒரு சில கட்டிடங்களில் இந்த கட்டிடம் ஒன்று என்பதால் இடித்து தள்ளிவிடக்கூடாது’ என்கின்றனர்.