நிதி நிறுவனத்தில் கொள்ளையிட்டுச் சென்ற இருவர் துப்பாக்கியுடன் கைது

358 0

அக்குரஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கொள்ளையிட்டுச் சென்ற  இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபர்களிடமிருந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதையடுத்து  குறித்த நபர்கள் இருவரும் நிதி நிறுவனத்திலிருந்து 2.9 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.