மஹிந்தவின் வழியில் செல்ல ஜனாதிபதி முயற்சி -முஜுபுர்

328 0

மஹிந்த ராஜபக்ஷவின் வழியில் செல்வதற்கே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  முயற்சிக்கிறார்.அதன் காரணமாகவே 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கும் தீர்மானத்துக்கு வந்துள்ளார்.

தொடர் முரண்பாடுகளுடன் ஜனாதிபதியுடன் ஆட்சியை முன்னெடுக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹூமான் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  தனிப்பட்ட  தேவைகளுக்கு ஏற்ப அரசியலமைப்பு திருத்தங்களை மாற்றியமைக்க முடியாது. 19 ஆவது அரசியலமைப்பு தீர்த்தத்தை நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும்  இடமளிக் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அலரி மாளிகையில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  அவர் மேலும் கூறியதாவது,

19 ஆவது அரசியலமைப்பு  திருத்தம் , நாட்டில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய திருத்தமாகும். இதனூடாக  சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறுப்பட்ட  ஜனநாயக உரிமைகளையும்  பெற்றுக்கொண்டுள்ளோம். இவ்வாறு இருக்கையில்  இந்த அரசியலமைப்பு திருத்தத்தை  நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி இடமளிக்காது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும  தற்போது மஹிந்தவின் வழியில் பயணிக்கவே முயற்சிக்கிறார். அதன் காரணமாகவே 19 ஆவது  அரசயிலமைப்பை நீக்க வேண்டும்  என்ற நிலைபாட்டுக்கு ஜனாதிபதி வந்துள்ளார் என அவர் இதன்போது தெரிவித்தார்.