அரசாங்கத்தின் புதிய கல்வித் திட்டத்துக்கு அமைய உயர் வகுப்பு மாணவர்களுக்கு டெப் கணனி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார்.
இதன், ஆரம்ப கட்டமாக தேசிய பாடசாலைகளில் கல்வி கற்கும் உயர் வகுப்பு மாணவர்களுக்கும், அதிலுள்ள ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும். அடுத்த கட்டமாக சகல பாடசாலைகளிலுமுள்ள உயர் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தரம் 6 முதல் மேல் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு டெப் கணினி வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மூன்றாம் கட்டமாக ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

