வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்திற்கு முன்பாக நடத்தப்பட்டது.
ஏ9 வீதியில் சுமார் ஒருமணி நேரம்வரை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் விடயத்தில் அரசாங்கம் கடந்த 4 வருடங்களாக எந்தவொரு கரிசனையையும் காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும், இனியும் இதனை இழுத்தடிக்காமல் விரைவில் உரிய பதிலை வழங்க, அரசாங்கத்துக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

