306 0

அரச கரும மொழிகள் வாரம் நாளை திங்கட்கிழமை(01.07.2019) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(05.07.2019) வரையில் ஐந்து நாட்களுக்கு அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அரச மொழிகள் வாரத்தின் முதல்நாள் அங்குரார்ப்பணம் நிகழ்வு மொழியுடன் வளர்வோம் மனங்களை வெல்வோம் எனும் தொனிப்பொருளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

இருமொழிகளை கற்போம் நாட்டைக் காப்போம் எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இரண்டாம் நாள் நிகழ்வு  இசிப்பத்தன கல்லூரியில் பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ளது.

மொழியே ஒழியாகும் எனும் தொனிப்பொருளில் நடைபெறும் மூன்றாம் நிகழ்வு கொழும்பு கோட்டை மிலோதா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதனை மொழிகளின் அருணோதயம் எனும் தொனிப்பொருளிலான நான்காம் நாள் நிகழ்வு பத்தரமுல்ல அப்பேகம பகுதியில் இளைஞர்களின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ளது. இதனையடுத்து ஐந்தாம் நாள் நிகழ்வு சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெறவுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து ஜேர்மன் அரசாங்கத்தின் வெளிவிவகார அலுவலகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உள்ளிட்ட அமைப்பின் ஒத்துழைப்புடன் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மேலும் இலங்கை அரசியலமைப்பின் நான்காம் அத்தியாயத்தில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகள் தேசிய மொழிகளாகவும், ஆங்கில மொழி இணைப்பு மொழியாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.