ஜனா­தி­ப­தி­யுடன் ஒப்­பந்­தத்­துக்குச் செல்­ல ­வேண்டும் – வாசு

293 0

ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியை தோற்­க­டிக்க ஜனாதி­ப­தி­யுடன் ஒப்­பந்­தத்­துக்குச் செல்­ல­வேண்டும்.அத்­துடன் மக்கள் விடு­தலை முன்­னணி ஒரு­போதும் தனது வேட்­பா­ளரை நிறுத்­தப்­போ­வ­தில்லை.அவர்கள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு ஆத­ர­வா­கவே இருப்­பார்கள் என ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

சோஷ­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து பலரும் பல­ரது பெயர்­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர். என்­றாலும் பொது­ஜன பெர­முன கட்சி இது­வரை யாரு­டைய பெய­ரையும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­க­வில்லை. அத்­துடன் இது ­தொ­டர்­பாக இது­வரை அறி­விக்­கப்­ப­டாமல் இருப்­பது எமது பக்கம் இருக்கும் குறை­யாகும். வேட்­பா­ளரின் பெயரை அறி­வித்­தால்தான் தற்­போது இருந்து தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளலாம்.

பொது­ஜன பெர­மு­னவில் அங்கம் வகிக் கும் கட்­சி­களது தலை­வர்­களின் அடுத்த கூட்­டத்­தின்­போது இது­ தொ­டர்­பாக எமது நிலைப்­பாட்டை நாங்கள் அறி­விக்க இருக்­கின்றோம். அதே­போன்று வேட்­பா­ள­ராக தற்­போது தெரி­விக்­கப்­படும் கோத்­த­பாய ராஜபக் ஷ, ஷமல் ராஜபக் ஷ ஆகி­யோ­ருக்கு எமது கட்­சியின் வேலைத்­திட்­டத்தை கைய­ளித்­தி­ருக்­கின்றோம். அதே­போன்று பசில் ராஜ­பக் ஷ­வி­டமும் எதிர்­வரும் தினங்­களில் கைய­ளிக்க இருக்­கின்றோம்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியைத் தோற்­க­டிக்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் நாங்கள் ஒப்­பந்தம் ஒன்­றுக்குச் செல்­ல­ வேண்டும். எங்­க­ளுக்கு ஜனா­தி­ப­தி­யுடன் ஆரம்­பத்தில் கோபம் இருந்­தி­ருக்­கலாம்.

என்­றாலும் இறு­தியில் அவர் எமது தலை­வரை பிர­த­ம­ராக்கி எங்­க­ளுக்கு அமைச்­சுப் ­ப­த­வி­களை வழங்கி அர­சாங்­கத்தைக் கொண்­டு­செல்ல நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தார். ஜனா­தி­ப­தியின் இந்த நட­வ­டிக்கை கார­ண­மாக ஐக்­கிய தேசிய கட்சி ஜனா­தி­ப­தியை விமர்­சித்து வரு­கின்­றது. ஆனால் பொது­ஜன பெர­முன உறுப்­பி­னர்கள் தற்­போது ஏன் ஜனா­தி­ப­தியை விமர்­சிக்­க ­வேண்டும்.

பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவை அமைத்து பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்கு ஜனா­தி­ப­தியே பொறுப்புக் கூற ­வேண்டும் என்று காட்­டும்­ வ­கையில் ஐக்­கிய தேசிய கட்சி ஒரு பக்­கத்தில் செயற்­பட்­டு­வரும் நிலையில் பொது­ஜன பெர­முன கட்சி உறுப்­பினர் சிலர் பத்­தி­ரி­கையில், தாக்­கு­த­லுக்கு ஜனா­தி­ப­தியே பொறுப்­புக்­கூ­ற­ வேண்டும் எனத் தெரி­வித்­து ­வ­ரு­கின்­றனர்.

இவர்கள் திட்­மிட்டு ஜனா­தி­ப­தியை இந்த விட­யத்தில் சிக்­க­வைக்க முயற்­சிக்­கின்­றார்­களா என்ற சந்­தேகம் எழு­கின்­றது.

ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை தங்­களின் கட்சி நிய­மிப்­ப­தாக மக்கள் விடு­தலை முன்­னணி அறி­வித்­தி­ருக்­கின்­றது. ஆனால் இவர்கள் ஒரு­போதும் வேட்­பா­ளரை நிய­மிக்­க ­மாட்­டார்கள். அவ்­வாறு நிய­மிப்­ப­தாக இருந்தால் மக்கள் மத்­தியில் பிர­பலம் இல்லாத ஒருவரையே நியமிப்பார்கள்.

மக்கள் விடுதலை முன்னணி ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவே செயற்படும். ஏனெனில் இவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க பிரசாரம் செய்தவர்கள். மீண்டும் ராஜபக்ஷவினர் ஆட்சிக்கு வர விரும்ப மாட்டார்கள். அதனால் மக்களை ஏமாற்றுவதற்கே தங்களின் வேட்பாளர் ஒருவரை களமிறக்கப்போவதாக தெரிவித்து வருகின்றனர் என்றார்.