இந்­திய புல­னாய்­வுத்­து­றை­யுடன் இணைந்து இரா­ணுவம் செயற்­ப­டு­கின்­றது – மகேஸ்

376 0

ஐ.எஸ். பயங்­க­ர­வா­தத்தை எதிர்த்துப் போரா­டு­வ­தற்­காக, இந்­திய புல­னாய்­வுத்­து­றை­யுடன், இலங்கை இரா­ணுவம் இணைந்து செயற்­ப­டு­வ­தாக, இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

மாது­று­ஓயா இரா­ணுவப் பயிற்சி முகாமில்,  இரா­ணுவ சிறப்புப் படை­யினர் பயிற்­சியை முடித்து வெளி­யேறும் நிகழ்வில், பங்­கேற்ற பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்ட போதே அவர் இவ்­வாறு கூறினார்.

“பாது­காப்பை உறுதி செய்­தி­ருந்­தாலும் கூட, எந்த நேரத்­திலும் நெருக்­கடி ஏற்­ப­டலாம். எந்த நாட்­டிலும் அது இயல்பு.

நாட்டின் புல­னாய்வு விட­யங்­களில் இந்­தியப் புல­னாய்வு அமைப்பு­க­ளுடன், ஒத்­து­ழைத்துச் செயற்­ப­டு­கிறோம்.

அனைத்­து­லக பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக நாங்கள் போரா­டு­வதால் அர­சாங்­கத்­துக்கும் இரா­ணு­வத்­துக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்க வேண்டும்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும், குற்றப் புல­னாய்வுப் பிரிவு, பொலிஸார், பாரா­ளு­மன்றத் தெரிவுக் குழு உள்­ளிட்ட எந்­த­வொரு விசாரணைக்கும் ஒத்துழைத்துச் செயற்பட இராணுவம் விரும்புகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.