யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பொது வீதியை தனியார் ஒருவர் அபகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவ்வீதியினை பொதுமக்களின் பாவனைக்காக வழங்குமாறு கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.நகரின் மத்தியில் அமைந்துள்ள கடை தொகுதிகளின் மத்தியில் குறித்த வீதி காணப்படுகின்றது.
அதனை வீதிக்கு அருகில் உள்ள கடை உரிமையாளர் அபகரித்து அதனை தனது கடையுடன் இணைத்துள்ளமையால் அவ்வீதி ஊடாக போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது.
எனவே குறித்த வீதியினை பொது போக்குவரத்திற்கு திறந்து விட வேண்டும் என கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

