பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம்

395 0
2019ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளி அடுத்த மாதம் வெளியிடப்படும் என பதில் உயர் கல்வி அமைச்சர் லக்கி ஜயவர்தன தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளி வெளியிடாமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பாகராளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் பல்கலைக்கழகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதன் காரணமாக இந்தப் பணிகள் தாமதமடைந்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.