யாழில் பனை உற்பத்திப்பொருள் கண்காட்சி(காணொளி)

384 0

பனை அபிவிருத்திசபையின் மாவட்ட மட்ட தாலக்கைவினை உற்பத்திப் பொருட்களின் காட்சிப்படுத்தல் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது.

பனை அபிவிருத்திசபையின் ஏற்பாட்டில் அகில இலங்கை ரீதியாக பனைசார் உற்பத்தி தயாரிப்புப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு சிறந்த தரமான பொருட்களுக்கான பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் பனை அபிவிருத்திச் சபையின் தலைமையகத்தில் அகில இலங்கை ரீதியாக சேகரிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டள்ளன.

நாட்டின் சகல மாவட்டங்களிலும் பனை உற்பத்திப் பொருட்கள் தொடர்பாக கற்பிக்கின்ற ஆசிரியர்களாலும் கற்கின்ற மாணவர்களாலும் உற்பத்தியாக்கப்பட்ட பனைசார் உற்பத்திப் பொருட்களே இன்று போட்டியில் இடம்பெற்றுள்ளன.

காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை நடுவர்கள் பார்வையிட்ட பின்னர் சிறந்த தரமான பனைசார் உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்து காட்சிப்படுத்தியுள்ள முதல் மூன்று மாவட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டு பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.