வட மாகாணத்தின் பதில் முதலமைச்சராக குருகுலராசா சத்தியப்பிரமாணம்

378 0

kurukularas

வட மாகாண சபையின் பதில் முதலமைச்சராக அம் மாகாண கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராசா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் முன்னிலையில் இவர் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றுள்ளமையினால் அவரின் அமைச்சுப் பதவிகள் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராசா மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் வடமாகாண சபையின் பதில் முதலமைச்சராகவும், வடமாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் ஒழுங்கு மற்றும் மின்சார பதில் அமைச்சராக தம்பிராஜா குருகுலராசாவும், காணி மற்றும் வீதி அபிவிருத்தி, வீடு மற்றும் நிர்மாணம், நீர்வள, கூட்டுறவு அபிவிருத்தி, சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு, மகளிர் விவகாரம், கைத்தொழில் மற்றும் வர்த்தக மேம்பாடு, சுற்றுலா, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள், நிர்வாக மற்றும் உணவு வழங்கல் மற்றும் விநியோக பதில் அமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசனும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.