பொது­ஜன பெர­முன – சுதந்­திர கட்சி தீர்க்கமான பேச்சுவார்த்தை இன்று

206 0

பொது­ஜன பெர­மு­ன­வுக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் இடை யில் பரந்­துப்­பட்ட கூட்­ட­ணியை அமைத்­த­லுக்­கான இரு தரப்பு ஆறாம் கட்ட பேச்­சு­வார்த்தை இன்று எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் இடம்பெற­வுள்­ளது.

ஜனா­தி­பதி தேர்­தலில் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள்    பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பய ராஜ­பக்ஷ  கள­மி­றக்­கப்­ப­டுவார் என்ற  நிலைப்­பாட்டில்  எதி­ர­ணி­யினர் உறு­தி­யாக உள்­ளார்கள். எனினும் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தான்   ஜனா­தி­பதி வேட்­பாளர் எனின்  பரந்­துப்­பட்ட   கூட்­டணி அமைக்கும் தீர்­மானம் மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­படும் என்ற   நிலைப்­பாட்டில்  ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்சி உள்­ளது.

ஸ்ரீ   லங்கா  சுதந்­திர கட்­சிக்கும் பொது­ஜன பெர­மு­ன­விற்கும் இடையில்  பரந்­துப்­பட்ட  கூட்­ட­ணி­ய­மைத்தல் தொடர்­பி­லான  இரு தரப்பு  பேச்­சு­வார்த்தை   ஐந்து  கட்­டங்­களை   நிறைவு  செய்­துள்­ளது  எனினும் கூட்­ட­ணி­ய­மைத்தல் தொடர்பில்   எவ்­வித உரிய தீர்­மா­னங்­களும்  இது­வ­ரையில் எட்­டப்­ப­ட­வில்லை.     பரந்­துப்­பட்ட  கூட்­ட­ணி­ய­மைத்­த­லுக்­கான  இறுதி தீர்­மானம் இம்­மாத  இறு­திக்குள்  எட்­டப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது .

இது­வரை   முடி­வுற்­றுள்ள  ஐந்து கட்ட பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் இரு தரப்­பி­னதும்    கட்சி கொள்­கை­களும்   ஆரா­யப்­பட்­டன.  இதன் பின்னர் இரண்டு  தரப்­பிற்கும் ஒரு­மித்த  கொள்கை   உரு­வாக்கம் பெற்று அவை   கட்­சி­களின்  உறுப்­பி­னர்­களின் கருத்­தா­ட­லுக்கு  விடப்­பட தீர­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.  அதன் பின்­னரே    பரந்­துப்­பட்ட  கூட்­டணி  தொடர்பில் இறுதி தீர­ட­மானம் எட்­டப்­படும்.

பரந்­துப்­பட்ட கூட்­டணி தொடர்பில் பொது­ஜன  பெர­மு­ன­வினர் குறிப்­பி­டு­கையில்

ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ராக    பல­மான கூட்­ட­ணி­ய­மைக்­கப்­பட வேண்டும் என்ற  கார­ணத்­தி­னா­லேயே   ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சி­யுடன்  பரந்­துப்­பட்ட  கூட்­ட­ணி­ய­மைத்­த­லுக்கு  இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டன. ஆனால் சுதந்­திர கட்­சி­யினர்  இன்றும்   கடந்த கால  பிணக்­கு­க­ளு­டனே  செயற்­ப­டு­கின்­றார்கள். கட்­டா­யப்­ப­டுத்தி  கூட்­ட­ணி­ய­மைப்­பதால் எவ்­வித   பயனும் கிடைக்­காது மாறாக  அர­சியல் நெருக்­க­டி­களே ஏற்­படும்.

இரு தரப்­பி­னரும்    கூட்­ட­ணி­ய­மைத்­தாலும்   பொது­ஜன பெர­மு­னவின்    மொட்டு  சின்­னத்­தி­னையும்   கட்­சியின் தலை­மைத்­து­வத்­தி­னையும் ஒரு­போதும் எக்­கா­ர­ணி­க­ளுக்­கா­கவும் விட்டுக் கொடுக்க முடி­யாது.  முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை    ஜனா­தி­பதி தேர்­தலில்  எமது தரப்பு   ஜனா­தி­ப­தி­யாக  கள­மி­றக்க  கட்­சியின் பெரும்­பா­லான  உறுப்­பி­னர்கள்  இணக்கம் தெரி­வித்­துள்­ளார்கள் என்று  தெரி­வித்­தனர்.

இதே­வேளை ஜனா­தி­பதி தேர்­தலில்     ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின்  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக   ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன போட்­டி­யிட வேண்டும்   என்றே   சுதந்­திர கட்­சி­யினர் ஆரம்­பத்தில் குறிப்­பிட்­டார்கள்.  பரந்­துப்­பட்ட கூட்­ட­ணி­ய­மைத்தல் தொடர்பில் முடி­வுற்ற  ஐந்­தா­வது பேச்­சு­வார்த்­தையின் போது   கூட்­ட­ணியின் ஊடா­கவே   ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான  வேட்­பா­ளரும்   பிர­த­மரும் தெரிவு செய்­யப்­ப­டுவார் என்று   சுதந்­திர  கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர்   தயா­சிறி  ஜய­சே­கர குறிப்­பிட்­டுள்ளார்.

பொது­ஜன பெர­மு­னவின்  ஜனா­தி­பதி வேட்­பாளர்  முன்னாள் பாதுகாப்பு   செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ  என்பது உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால்   இரு  தரப்பினருக்கும் இடையிலான பரந்துப்பட்ட   கூட்டணியமைத்தல் தொடர்பில் சுதந்திர கட்சி  மறுசீலனை    செய்யும்.  அல்லது  தனித்து போட்டியிடும்  தீர்மானமும் எடுக்கப்படும்.    எனபது  பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பில் சுதந்திர கட்சியின்  நிலைப்பாடாக காணப்படுகின்றது.