கட்டு துவக்குடன் இருவர் கைது!

79 0

திருகோணமலை-மொரவெவ  பகுதியில் கட்டுத்துவக்குடன் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், திருகோணமலை-மொரவெவ பகுதியில் கட்டுத் துவக்குடன் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் , முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரும் இன்று அதிகாலை (14) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான மஹதிவுல்வெவ – சுவர்ண ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த  30 வயதான ஏ. சம்பத்குமார மற்றும் முன்னாள் இராணுவ வீரரான சமகிபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதான டி. ஜீ. சன்ஜீவ மனோஜ் றூகாந்த ஆகியோரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மோட்டார் சைக்கிளொன்றும்  கைப்பற்றப்பட்டதாகவும் சந்தேகநபர்கள் இரண்டு பேரையும் இன்று திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.