தமது கோரிக்கைகளுக்கானத் தீர்வுகள் வழங்கப்படாமையால், சிறிகொத – ஐக்கிய தேசிய கட்சித் தலைமையக காரியாலயத்துக்கு முன்பாக, உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (11) நள்ளிரவு ஆரம்பிக்கப்படவுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டமானது, நாளை (12) காலை 10 மணிக்குப் பின்னரான கலந்துரையாடலில், உரிய முறையில் தீர்வுகள் கிடைக்காவிடில், போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறுமென அவர்களால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

