உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை அதிகாரம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேபோன்று பாராளுமன்றத்தினரும் பொது மக்களினதும் இறைமையை பாதுகாப்பதற்கும் தாம் செயற்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தெரிவுக்குழு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்ற கோரிக்கையுடன் சிவில் அமைப்புகள் சில இன்று காலை அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்த வேளையிலேயே இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

