மாகாணசபை தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு ஐ.தே.க காரணமல்ல – அஜித்

224 0

மாகாணசபை தேர்தல்  காலவரையறையின்றி  பிற்போடப்பட்டமைக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் எவ்வித  தொடர்பும் கிடையாது என டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் அஜித் பி. பேரேரா தெரிவித்தார்.

ஆரசியல் கட்சி செயாளர்களுக்கும், கட்சியின்  முக்கிய  உறுப்பினர்களுக்கும் தேர்தல் ஆணைக்குவின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று தேர்தல் ஆணையகத்தில் இடம் பெற்றது. இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

துற்போது  மாகாண சபைக்கு பொறுப்பான அமைச்சு  ஐக்கிய தேசிய கட்சியிடம் காணப்படுகின்றது. தேர்தலை  விரைவாக நடத்த  அனைத்து நடவடிக்கைகளும் முறையாக இடம் பெறுகின்றது.  ஓரு தரப்பினரின்  அவசரத்திற்கு இணங்க நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தலை  நடத்தினால் அவை மறுபுறம் பிரச்சினைகளை  ஏற்படுத்தும்.

நாட்டு மக்கள் இன்று  ஜனாதிபதி தேர்தலையே எதிர்பார்த்துள்ளார்கள். இத்தேர்தலின் ஊடாகவே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.