ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து மொரட்டுவையில் உண்ணாவிரதம்

242 0

மொரட்டுவை நகரசபை முன்பாக மொரட்டுவை நகராதிபதி உட்பட நான்கு நபர்களால் இன்று உண்ணாவிரத ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த தினம் இலங்கையில் தச்சு தொழிலை இல்லாமல் செய்வதாக குறிப்பிட்ட கருத்து தொடர்பில் , அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மொரட்டுவையில் இரு நாட்களாக சத்தியாகிரக போராட்டம் இடம்பெற்றது.

இந்த போராட்டம் குறித்து ஜனாதிபதி பாராமுகமாக செயற்படுவதினால்,இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் பார்வையை திருப்புவதற்காகவே இந்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாரம்பரியமான தச்சு வேலைகள் மற்றும் தச்சு தொழிலுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கபடும் கருத்துக்களை நீக்கி கொள்ளுமாறும் , தச்சு தொழில் தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட உள்ள வர்த்தமானி அறிவித்தலில் செயற்திட்டங்களை மொரட்டுவை பகுதிக்குள் செயற்படுத்த வேண்டாம் எனவும் போராட்டகாரர்கள் குறிப்பிட்டே போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இவ்வாறு ஜனாதிபதியினால் தச்சு தொழில் தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்.

பாரம்பரிய தச்சு கலை வளர்சிக்கு பங்கம் விளைவிப்பதுடன் , புதிய தொழிலாளர்களின் உருவாக்கத்தை  கட்டுப்படுத்துவதனால் தச்சு தொழில் வேலைப்பாடுகளின் வளர்ச்சியிலும் வீழ்ச்சி ஏற்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி உடனடியாக கவனம் செலுத்தி செயற்பட வேண்டும் எனவும் போராட்ட காரர்கள் தெரிவித்தனர்.தச்சு தொழிலாளர்கள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தும் வரை இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.