யாழ் கார்மேல் முன்பள்ளியில் சிறுவர் பூங்கா இன்று திறந்து வைக்கப்பட்டது(படங்கள்)

179 0

யாழ்  கார்மேல் முன்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, இன்று திறந்து வைக்கப்பட்டது.குறித்த சிறுவர் பூங்காவினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாநகர சபை உறுப்பினருமான சொலமன் சூ சிறில் திறந்து வைத்தார்.

கம்பரெலியா ஊரெழுச்சித் திட்டத்தின்கீழ், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் 5 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இச் சிறுவர் பூங்கா திறப்பு நிகழ்வில், கார்மேல் கன்னியர் மடத் தலைவியும், யாழ் புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலய அதிபருமான அருட்சகோதரி மேரி றொசாந்தி, முன்பள்ளி அதிபர், ஆசிரியர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.
இதன்போது சிறுவர் பூங்கா திறந்துவைக்கப்பட்டு, மாணவர்கள் விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.