வவுனியாவில் தேக்கவத்தைப் பகுதியில் இன்று காலை 7மணியளவில் ஹெரோயின் போதை பொருளை தனது உடமையில் மறைத்து வைத்திருந்தவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று காலை தேக்கவத்தைப்பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது ஹெரோயின் போதை பொருளை தனது உடமையில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அவரிடமிருந்து 2கிராம் 170மில்லிக்கிராம் ஹெரோயின் போதை பொருளை மீட்கப்பட்டுள்ளதாகவும் 45 வயதுடைய தேக்கவத்தைப்பகுதியைச் சேர்ந்தவரை கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

