ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டணியமைத்தலுக்கான இரு தரப்பு பேச்சுவார்த்தை நாளை காலை எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
கடந்த காலங்களில் பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் தொடர்பில் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. இந் நிலையில் நாளை இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை ஒரு உறுதியான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன்படி இப் பேச்சுவார்த்தையில் பொதுஜன பெரமுன சார்பில் ஜி. எல். பீறிஸ், ஜகத் வெல்லவத்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால மற்றும் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாச ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

