சில சர்வதேச நாடுகளினூடாகவே  பயங்கரவாதம் பரவலாகிறது-நவீன்

310 0

பயங்கரவாதிகளை கூண்டோடு ஒழிப்பதற்கு சர்வதேச உதவிகள்  அவசியமாகும். ஒருசில சர்வதேச நாடுகளினூடாகவே  ஏனைய நாடுகளுக்கு பயங்கரவாதம் பரவலாகிறது. ஆகவே பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பில் சவூதி அரேபியா, கட்டார்  போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று  பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் வருடாந்த டிப்ளோமா பட்டமளிப்பு விழா அமைச்சர் திஸாநாயக்க தலைமையில் இன்று பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாரிய குறைபாடுகளின் மத்தியிலேயே கடந்த 70 வருட ஆட்சி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி , ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட  அனைத்து அரசியல் தரப்பினரிடமும் குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆனால்  நாட்டின் வெற்றி தொடர்பில் எவரும் பேசுவதில்லை. சிலர் 30 வருட கால யுத்தத்தை மறந்து விட்டனர். அதனால் ஏற்பட்ட இழப்புக்கள் எண்ணற்றவையாகும். அந்த நிலையை மீண்டும் நாட்டில் தோற்றுவிக்க இடமளித்துவிடக் கூடாது எனவும் இதன்போது தெரிவித்தார்.