சென்னையில் பிரபல ஃபுட் டெலிவரி நிறுவனமான ‘ஸ்விகி’ பெயரில் மோசடி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
சென்னையில் உள்ள முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கர் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பிரசாத்துடன் நெருங்கிய நண்பரான சங்கர், ஸ்விகி நிறுவனத்தில் இணைந்து நாம் பணியாற்றலாம் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த வாகனங்கள், செல்போன்களை ஸ்விகியுடன் நிரந்தரமாக இணைத்து தருவதாகவும் கூறிய சங்கர், அவற்றை பிரசாத்திடம் இருந்து வாங்கி சென்றுவிட்டார். அன்று முதல் தற்போது வரை சங்கர் குறித்தும், பிரசாத்தின் உடைமைகள் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து பிரசாத், சென்னை மாநகர காவல் நிலையத்தில் இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சங்கரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

