வவுனியா தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் சலசலப்பு (காணொளி)

383 0

tamil-meettingவவுனியாவில் தமிழ் அரசு கட்சியினரின் கூட்டம் நேற்று வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்தின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கடந்தகாலத்தில் கட்சியின் நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கட்சித் தொண்டர்கள் மத்தியில் விளக்க உரை நிகழ்த்தியதுடன், கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தனர்.

இதன்போது கட்சி உறுப்பினர்களின் கேள்வி நேரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.