அத்துரெலிய ரத்ன தேரருக்கு ஐ.தே.க அழைப்பு

264 0

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் கலந்துரையாடல்களின் மூலம் பிரச்சினைக்கு தீர்வுக்காண முன்வர வேண்டும் என்று  மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறன்று  இடம்பெற்ற  தாக்குதல் சம்பவங்களை  தொடர்ந்து  நாட்டின் அரசியல் நிலவரங்களிலும் சிறு தடுமாற்றம் ஏற்பட்டிருந்தது.  அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு  எதிராக  எதிரணியினர்  பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த நிலையில் அவருக்கு  எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றையும் கொண்டுவந்திருந்தனர்.

இதன் பின்னணியிலேயேஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்கள் தொடர்பிலும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு  எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும்  விசாரணைசெய்ய பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளன. ஆகவே தெரிவுக்குழுவின் விசாரணைகளின் இறுதி அறிக்கைக்கு அமைவாக  ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து முடிவெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.