இனப்பிரச்சினை தீர்வு – தொடர்ந்துவரும் துரோகம் – கிழக்கு மாகாண முதலமைச்சர்

296 0

150205162505_hon_za_nazeer_ahamed_sri_lanka_slmc_eastern_provincial_council_640x360_bbcஇனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது வரலாற்றில் தீர்வின்றித் தொடர்ந்து வருகின்ற ஒரு துரோகமாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதுவரை காலமும் நடந்த பேச்சு வார்த்தைகள் எவ்வாறு இழுபறியாக அமைந்தனவோ அதன் தொடர்ச்சியாகவே இப்போதைய நகர்வுகளும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

13வது அரசியல் சட்டத் திருத்தத்திலே, குறிப்பிடப்பட்டிருக்கும் விடயம் மத்திய அரசால் மறுக்கப்பட்டு இந்த நாட்டின் அரசியல் யாப்பின் இறைமை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது.

காணி, காவல்துறை மற்றும் கல்வி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், முதலமைச்சர், கல்வி அமைச்சர், அதன் செயலாளர், ஆளுநர் ஆகியோரிடம்; யாசகம் கேட்கின்ற அளவுக்கு மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட கல்வி அதிகாரங்களை மத்திய கல்வி அமைச்சு துஷ்பிரயோகம் செய்து வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.