பண்டாரவளையில் புத்தக விற்பனை நிலையத்தில் திடீர் தீப்பரவல்

356 0

பண்டாரவளைப் பகுதியின் கினிகம என்ற இடத்தில் புத்தக விற்பனை நிலையமொன்று திடீரென்று தீப்பிடித்துள்ள சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.இத்தீப்பரவல் சம்பவத்தினால் 5 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் காகிதங்கள் முற்று முழுதாக தீக்கிரையாகியுள்ளன.

உயிராபத்துக்கள் எதுவும் இச்சம்பவத்தில் இடம்பெறவில்லை.

இது குறித்து பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின் ஒழுக்கின் காரணமாகவே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின் தெரியவந்துள்ளது.