வேலணைப் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட வெள்ள நிவாரணத்தில் கையாடல் விசாரணைகளை ஆரம்பித்தது யாழ்.மாவட்டச் செயலகம்

550 0

i3வேலணைப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய வெள்ள நிவாரணப் பொருட்களை கையாடப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வேலணைப் பிரதேச செயலகத்திற்கு எதிராக யாழ்.மாவட்டச் செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணையில் குறித்த பகுதிகளில் கிராம சேவையாளர்கள் முதலில் வரவளைக்கப்பட்டு கடும் விசாரணைகளக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்களின் விபரங்கள் அந்தந்தப் பகுதி கிராம சேவையாளர்களினால் சேகரிக்கப்பட்ட பிரதேச செயலகங்களிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளும் மாவட்ட அனர்த முகாமைத்துவ பிரிவினால் வழங்கிவைக்கப்பட்டுவருகின்றது.
இதன்படி கடந்த வருடங்களில் வேலணைப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதற்காக கையளிக்கப்பட்ட வெள்ள நிவாரணத்தில் பெரும் மோசடி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வெள்ள நிவாரணங்கள் வழங்கப்படாமல் உயர் அதிகாரிகளின் மேர்பார்வையின் கீழ் அவை கையாடப்பட்டுள்ளது.
அதாவது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்கள் ஒரு முறை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பதிவேடுகளில் அவர்களுக்க தொடர்ச்சியாக பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டும் செய்யப்பட்டது.
இதன்படி வேலணைப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்கள் கையாடப்பட்டமை தொடர்பாக யாழ்.மாவட்டச் அரசாங்க அதிபர் தலமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்விசாரணைகளின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளாக வேலணைப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளின் கிரம சேவையாளர்கள் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு அழைக்கப்பட்ட கிராம சேவையாளர்கள் ஒவ்வொருவரையும் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில்நந்தனினால் தனித்தனியாக தமது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டடது.
கிராம சேவையாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்றும் யாழ்.மாவட்ட செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment