தெரிவுக்குழு விசாரணை தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாதவாறு முன்னெடுக்கப்படும்- ஜயம்பதி

310 0

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில்  நியமிக்கப்பட்டுள்ள  பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை  ஏற்படுத்தும் வகையிலோ அல்லது  புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலோ விசாரணைகள் இடம்பெறாது.  சர்ச்சைக்குறிய சாட்சிகள் பகிரங்கப்படுத்தப்பட மாட்டது. பாதுகாப்புக்கு  பங்கத்தை ஏற்படுத்தும் விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்க போவதில்லை என்று தெரிவுக்குழுவின் உறுப்பினர்  கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.

தெரிவுக்குழுவின் அடுத்த விசாரணைகள்  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என்றும்  விசாரணைகளின்  அறிக்கையை நீதிமன்ற  விசாரணைகளுக்கு பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கும் என்றும் அவர்  குறிப்பிட்டார்.

அலரிமாளிகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.