அனுமதிப்பத்திரமற்ற பேர 12 வகைத் துப்பாக்கி மற்றும் 04 தோட்டாக்களுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் பெலவத்தை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீகஹதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கி பெல்ஜியம் நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கி என்பதுடன், சந்தேகநபர் இதனை் வேட்டைக்காக பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீகஹதென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

