லெஜர்­வத்தை பெருந்­தோட்ட தொழிலா­ளர்களுக்கு இரா­ணுவ அச்­சு­றுத்தல்!

293 0

பதுளை லெஜர்­வத்தை தோட்­டத்தில் தொழிற்­சங்க ரீதி­யாக தீர்க்க வேண்­டிய பிரச்­சினை ஒன்­றினை இரா­ணு­வத்­தினரைக் கொண்டு தொழி­லா­ளர்­களை அச்­சு­றுத்தி நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டதாகவும் இதனால் அச்­சமும் அதி­ருப்­தியும் அடைந்ததாகத் தெரிவித்த தொழி­லா­ளர்கள் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை டயர்­களை எரித்தும்  உருவ பொம்மை செய்து அதனை தாக்­கியும் வீதியை மறித்தும் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்­கொண்­டனர். 

குறித்த தோட்­டத்தில் மரங்கள் வெட்­டப்­ப­டு­வ­தா­கவும் வெட்­டிய மரங்­களை புதி­தாக அமைக்­கப்­பட்ட கொங்­கிரீட் பாதையின் ஊடாக கொண்டு செல்­வதால் பாதை பழு­த­டை­வ­தா­கவும் தொழி­லா­ளர்­களால் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  குறித்த பாதையை திருத்தும் பொருட்டு பிர­தேச சபை உறுப்­பினர் ஊடாக தொழி­லா­ளர்கள் சிலரும் தோட்ட நிர்­வா­கத்­துடன் சந்­திப்­புக்­களை நடத்­தி­ய­போ­திலும் தொழி­லா­ளர்கள் சார்­பி­லான கோரிக்­கைகள் செவிமெ­டுக்­கப்­ப­ட­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதன்­போது ஏற்­பட்ட கருத்து முரண்­பா­டு­க­ளை­ய­டுத்து இரா­ணுவம் தோட்­டத்­திற்கு அழைக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு எதி­ராக தகா­த­ வார்த்­தை­களும் பிர­யோ­கிக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கின்­றனர். இதனால் அச்சம் கொண்ட தோட்ட மக்கள் சம்­பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷின் கவ­னத்­துக்கும் கொண்டு சென்­றி­ருந்­தனர்.

இந்­நி­லை­யி­லேயே நேற்று செவ்­வாய்க்­கி­ழமை மேற்­படி தோட்டத் தொழி­லா­ளர்கள் ஒத்­து­ழை­யாமை போராட்­டத்தை முன்­னெ­டுத்­தனர். அத்­துடன் தமது தரப்­பி­லி­ருந்து பல கோரிக்­கை­க­ளையும் விடுத்­துள்­ளனர்.

இந்த போராட்­டத்­தின்­போது தொழி­லா­ளி­களின் அடி­மைத்­தனம் இனியும் வேண்டாம்.¸ தோட்டத் தொழி­லா­ளர்­களின் உரி­மை­களைக் கொடு போன்ற வாச­கங்கள் எழு­தப்­பட்ட பதா­தை­களை தொழி­லா­ளர்கள் ஏந்தி நின்­றனர்.

ஆர்ப்­பாட்ட இடத்­துக்கு வரு­கை ­தந்த பெருந்­தோட்ட கைத்­தொழில் இரா­ஜாங்க அமைச்­சரும் இலங்கை தேசிய தோட்ட தொழி­லாளர் சங்­கத்தின் பொதுச் செய­லா­ள­ரு­மான வடிவேல் சுரேஷ்  மக்­களின் ஆர்ப்­பாட்­டத்தில் கலந்­து­கொண்டு அவரும் கோசங்­களை எழுப்­பி­யதைக் காண­மு­டிந்­தது.

அத்­துடன் சம்­பந்­தப்­பட்ட தோட்ட கம்­ப­னியின் உயர் அதி­கா­ரி­க­ளு­டனும் பொலிஸ் அதி­கா­ரி­க­ளு­டனும் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு பேசிய இராஜாங்க அமைச்சர் மக்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டினார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரி­வித்த வடிவேல் சுரேஷ்,

பெருந்­தோட்ட காணிகள் அனைத்தும் அர­சாங்­கத்­திற்கு சொந்தம். அர­சாங்­கத்­திற்கு சொந்தம் என்றால் தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு சொந்தம். கம்­ப­னிகள் வாட­கைக்கே தோட்­டங்­களை பெற்­றுள்­ளன. அவர்­களில் காலத்­திற்கு காலம் வரும் அதி­கா­ரிகள் தங்­க­ளுக்கு ஏற்­றாற்போல் முறை­க்கே­டான செயற்­பா­டு­களை மேற்­கொண்டு தோட்ட மக்­களின் ஒற்­று­மை­யையும் அபி­வி­ருத்­தி­க­ளையும் சீர்­கு­லைத்து வரு­கின்­றனர்.

இதனால் பாதிப்படைவது அப்பாவி தோட்ட தொழிலாளர்களே. பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் என்ற வகையிலும் தொழிற்சங்கவாதி என்ற வகையிலும் இதனை வன்மையாக கண்டிக்கின்றேன். தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு லெஜர்வத்தை தோட்ட பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று கூறினார்.