பெண் சட்டத்தரணி கைது

285 0

பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் பணிக்குத் தடங்களை ஏற்படுத்தி, காயப்படுத்திய குற்றச்சாட்டில் பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சட்டத்தரணி புதுக்கடை உயர் நீதிமன்ற தொகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற நுழைவாயிலில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர், குறித்த பெண் சட்டத்தரணியைச் சோதனையிட முற்பட்டபோது, பொலிஸ் அதிகாரியின் கையை நகத்தினால் காயப்படுத்தியதாகச் சட்டத்தரணி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த சட்டத்தரணி இன்று காலை கைது செய்யப்பட்டதாகவும், காயமடைந்த பெண் பொலிஸ் அதிகாரி இன்று நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.