வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று தருவதாக பண மோசடி

266 0
இத்தாலியில் தொழில் வாய்ப்பினை பெற்று தருவதாக தெரிவித்து மாத்தறை ஹக்மின பிரதேசத்தை சேர்ந்த இருவரிடம் 1,050,000 ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விஷேட விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீகொட விகார மாவத்தையை சேர்ந்த ராணி ஹேமந்தி என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதே வேளை இஸ்ரேலில் தொழில் வாய்ப்பை பெற்று தருவாதாக தெரிவித்து 450,000 ரூபாவை மோசடி செய்த வெலிவேரி பிரதேசத்தை சேர்ந்த சமிலா சத்துரங்கனி ஜெயவர்த்தன என்ற பெண் பணியக விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தமது கணவருக்கு இஸ்ரேலில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்காக சந்தேக நபர் உறுதி தெரிவித்துள்ளார். ஆனால் உரிய வகையில் அவருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பணியகத்தில் முறைப்பாடு செய்ததாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இவர் கைது செய்யப்பட்ட பின்னர் கம்பஹா நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். தாம் பெற்றக் கொண்ட பணத்தை திருப்பி செலுத்துவதாக சந்தேக நபர் உறுதி தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக தலா 2 இலட்சம் ரூபா தருவேன் என்று உறுதி தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் இவர் 2 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் இது தொடர்பான வழக்கு விசாரணை இம்மாதம் 31 ஆம் திகதி நடைபெறும் என நீதவான் அறிவித்துள்ளார்.