நான்கரை இலட்சம் பேருக்கு இரகசியமாக சமுர்த்தி அட்டைகள்!

381 0

அரசாங்கம் இரகசியமாக நான்கரை இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவாரண அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அதனை மேற்கொள்வதற்கா ஆயிரத்தி 800 லட்சம் ரூபா செலவிட்டுள்ளது என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான மஹிந்த  அமரவீர தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன் வைத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

அரசாங்கம் எதிர்வரும் 31 ஆம் திகதி நான்கரை  இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவாரண அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இதில்பாரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கினது. உண்மையாக சமுர்த்தி உதவி பெற தகுதியுடையவர்களுக்கு இது வழங்கப்படுவதாக இருந்தால் அதில் பிரச்சினை இல்லை. மாறாக ஐக்கிய தேசிய கட்சிக்கு தேவையானவர்களுக்கு மாத்திரம் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது எனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.