செயற்கை கருப்பை கண்டுபிடிப்பு : பெண்களுக்கு வரப்பிரசாதம்!

382 0

 என்னதான் எல்லா மருத்துவ முன்னேற்றங்களையும் நாம் உருவாக்கியிருந்தாலும், கர்ப்பம் மற்றும் பிரசவம் ஆகியவை இன்னும் ஆபத்தான செயல்முறையாகவே இருக்கின்றன. பல விஷயங்கள் தாய் அல்லது குழந்தைக்கு தவறாக போகும் வாய்ப்புகள் உள்ளன. அதனால்தான் விஞ்ஞானிகள் அந்த சில பிரச்சினைகளை அகற்றுவதற்காக தங்களால் முடிந்த அளவிற்கு சிறப்பானதை செய்கிறார்கள்.

பிலடெல்பியாவின் குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தற்போது அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையத்துடன் (எஃப்.டி.ஏ) பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மனித கருக்களை செயற்கை கருப்பைகளில் வளர அனுமதிக்கக்கூடிய சோதனைகளை தொடங்குவதற்கான அனுமதிக்கு காத்திருக்கின்றனர். மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதை செய்ய விரும்புகிறார்கள்.

 புரட்சிகரமானதாக இருக்கும்

இம்முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றால், குழந்தை பிறப்பில் அவர்களது பணி புரட்சிகரமானதாக இருக்கும் என்பதை நாம் அறிவோம் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் இறப்பை தடுக்கமுடியும். ” செயற்கை கருப்பையில் கரு இருந்தால், அதை எளிதில் அணுக முடியும் மற்றும் பெண்ணின் சுயநிர்ணயத்தை தடைசெய்யாமல் சூழலை கட்டுப்படுத்தலாம். எனவே சில வழிகளில் உண்மையிலேயே கருவிற்கும் இதனால் பலன்கள் உண்டு” என்கிறார் ஓஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தத்துவவாதி அன்னா ஸ்மஜ்டர்.

பெண்கள் உண்மையில் கர்ப்பம் தரிக்காமல் அல்லது வாடகைத்தாய் போன்றமுறைகளுக்கு செல்லாமல், தங்களின் சொந்த குழந்தையை பெற்றெடுக்க முடியும். ஒன்பது மாதங்களுக்கு வளர்ந்து வரும் கருவை சுமந்து செல்வதற்கு பதிலாக, அதை ஒரு ஆரோக்கியமான செயற்கை கருப்பையில் மாற்றிவைத்து குழந்தைக்கு தேவையான அனைத்து ஆரோக்கியமான சூழ்நிலைகளையும் வழங்க முடியும்.

முதல் மற்றும் முக்கியமானதாக மருத்துவ நிலைகள் சரியாக இல்லாத பெண்கள் வாடகைத்தாய் இல்லாமல் தங்கள் குழந்தைகளை பெற்றெடுக்கமுடியும். இது கர்ப்பப்பை வாய் பிரச்சினைகள் கொண்ட பெண்கள் அல்லது கரு முட்டைகள் நன்றாக இருந்தும் கூட கருப்பை ஏற்றதாக இல்லாத பெண்களுக்கு தீர்வாக இருக்கும். ஆனால் இதைப் படிக்கிற பெரும்பாலான பெண்கள் முதலில் உணரக்கூடியது என்னவென்றால், இந்த தொழில்நுட்பம் அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் கூட சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது என்பதுதான்.

கர்ப்பமாக இருப்பதை அறிவித்தவுடன் ​​தங்கள் பணியிடத்தில் எத்தனை பெண்கள் தங்கள் வேலைகளை விட்டு வெளியேற்றப்பட்டனர் பற்றி யோசிக்கவேண்டும். கர்ப்பகாலத்தில் பணியில் ஏற்பட்ட இடைவெளி காரணமாக எத்தனை பெண்களை வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் தயங்குகின்றன. வேலைக்கு செல்லாத பெண்களும் பாதுகாப்பாக இல்லை அல்லது ஆரோக்கியமாக இல்லை போன்றகாரணங்களால் தாங்கள் பங்கேற்கக்கூடிய செயல்களில் தங்களை கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். செயற்கை கருப்பை உதவியுடன் பெண்கள் தாய்பால் கொடுக்க துவங்கும் வரை கூடுதலாக சில மாதங்களுக்கு சுதந்திரமாக இருந்துகொள்ளலாம் . அந்த துரதிருஷ்டவசமாக இன்னும் முற்றிலும் மாற்று செயல்முறையாக இது இல்லாமல் இருந்தாலும் குறைந்தபட்சம் இது ஒரு தொடக்கமாக உள்ளது.

இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டாலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த செயற்கை கருப்பைகளை மருத்துவ சோதனைகளில் மட்டுமே பார்க்கமுடியும். எல்லாம் திட்டமிட்டபடி சென்றால், இந்த சாதனங்களை முழுமையாக அபிவிருத்தி செய்ய இன்னொரு பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் ஆகும். ஆனால் புதுமையாக ஏதாவது ஒன்றை துவங்கியுள்ளோமே!.