அமேதி தொகுதியில் ராகுல் பின்னடைவு- மோடி, அமித் ஷா முன்னிலை

77 0

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்தங்கியுள்ளார்.17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில், துவக்கம் முதலே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தொடர்ந்து முன்னிலை பெற்றார். அமித் ஷா காந்தி நகர் தொகுதியில் முன்னிலை பெற்றார்.

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துவக்கத்தில் முன்னிலை பெற்றார். காலை 8.30 மணிக்கு பிறகு ராகுல் சற்று பின்தங்கினார். அதேசமயம் வயநாடு தொகுதியில் ராகுல் தொடர்ந்து முன்னிலை பெற்றார். அதேபோல், ரேபரேலி தொகுதியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி முன்னிலை வகிக்கிறார்.