தற்கொலைத் தாக்குதல் குறித்து உண்மைகளைக் கண்டறிய நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமனம்!

303 0

கடந்த மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் குறித்து முழுமையாக உண்மைகளை கண்டறியும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

இதில் அமைச்சர்கள், மந்திரிகள் மற்றும் ஆளுநர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஆராயமுடியும் என்ற காரணியும் புதிதாக இணைந்துகொள்ளப்பட்டது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராயும் வாக்கியில் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இதில்  2019  ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காராணமாக 250 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டமை மற்றும் பொதுமக்களுக்கு சேதம் ஏற்பட்டும் சொத்துகளும் அழியப்பட்ட காரணத்தினால் அத்தகைய தாக்குதல்களுக்கு முன்னர் அது பற்றிய புலனாய்வுத்துறை தகவல்கள், சட்டத்தை அமுல்ப்படுத்தும் அதிகாரிகளுக்கு கிடைத்திருந்தாத என்பதையும், அத்தகைய தாக்குதல்களை தடுப்பதற்கு மற்றும் அவற்றை குறைத்துக்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதியளவில் நடவடிக்கை மேற்கொண்டார்களா என்பதையும், அத்தகைய தாக்குதல்களின் பாதிப்புகளை தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு முடியாமல் போனதற்கு காராணமாக அமைந்த அரச பொறிமுறையின் குறைபாடுகள் காணப்பட்டுள்ளதா என்பதையும் பயங்கரவாத தாக்குதலுக்கு பங்களிப்புச்செய்த வேறு விடயங்களையும், எதிர்காலத்தில் அத்தகைய தாக்குதல்கள் இடம்பெறுவதை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் யாவை என்பது குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நேற்று முன்தினம் கட்சித்தலைவர் கூட்டத்தின்போது தெரிவுசெய்யப்பட்டது.

இந்தக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த புஞ்சி நிலமே, பியசேன கமகே, ஆசு மாரசிங்க, முஜிபூர் ரஹ்மான், கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, ஹர்ஷா டி சில்வா, கருணாரத்ன பரணவிதான, அஜித் மனப்பெரும, ஹர்ஷன ராஜகருணா, ஜே.சி.அளவதுவல, லக்கி ஜெயவர்தன, சந்தித் சமரசிங்க, மாவை சேனாதிராஜா, ஸ்ரீநேசன், சார்ல்ஸ் நிர்மலநாதன், ஏ.டி.பிரேமதாச, விஜித் விஜயமுனி சொய்சா, முகம்மத் நசீர், எம்.தௌபிக், பிரியங்க ஜெயரதன, குமார வெல்கம, வி. ராதாகிருஷ்ணன், முகம்மத் இஸ்மாயில், இஷாக் ரகுமான், ஏ.எச்.எம். பௌசி, நலிந்த ஜெயதிஸ்ஸ, சுனில் ஹந்துன்நெத்தி, அஜித் பி பெரேரா, எம்.திலகராஜா, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, அனுராத ஜெயரத்ன, நிமல் லான்சா, சி.பி.ரத்நாயக, அனுர பிரியதர்ஷன யாப்பா, டி.பி ஏக்கநாயக, சுசில் பிரேமஜெயந்த, வாசுதேவ நாணயக்கார, சித்தார்த்தன், உதய கம்மன்பில, அருந்திக பெர்னாண்டோ ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்,

இந்நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை சர்ச்சை எழுந்த நிலையில் அவர் குறித்து ஆராயும் வகையில் அமைக்கப்பட வேண்டிய பாராளுமன்ற தெரிவுக்குழுவும் இந்த தெரிவுக் குழுவும் ஒன்று என ஆளும் கட்சியில் உறுப்பினர்களான ஆசு மாரசிங்க மற்றும் கலாநிதி ஜெயம்பதி ஆகியோர் சபையில் சுட்டிக்காட்டினர்.

எனினும் இதற்கு எதிர்க்கட்சியில் ஜே.வி.பி உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் பிரதான எத்ரிக்கட்சி உறுப்பினர்களான சுசில், பந்துல்ல, விமல் வீரவன்ச எம்.பி ஆகியோர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் 21 ஆம் திகதி சம்பவம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவும் அமைச்சர் ரிஷாத் குறித்து ஆராயும் தெரிவுக் குழுவும் ஒன்றல்ல என சபையில் வாதாடினர்.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சபையில் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. அதாவது குறித்த இந்த தெரிவுக்குழுவில் ஒரு சில விடயங்களை இணைத்து இந்த தெரிவுக்குழுவிலேயே அமைச்சர் ரிஷாத் மீதான விசாரணை நடத்தும் செயற்பாடுகளை கையாளலாம் என தெரிவித்தார். அதற்கமைய இந்த தெரிவுக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் ஆகியோரு குறித்தும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியும் என்ற யோசனையை ஆளும்தரப்பு உறுப்பினர் கலானித்து ஜெயம்பதை விக்ரம்ரதன் சபையில் முன்மொழிந்து சபையில் அங்கீகாரமும் பெறப்பட்டது.