இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் பாகிஸ்த்தான் கடற்படையினரால் கைது

258 0

மாத்தறை – மிரிஸ மீன்பிடி துறைமுகத்தின் ஊடாக மீன்பிடிக்கச் சென்ற ஆழ்கடல் மீன்பிடி படகான ‘ ரன்மெனிகா’ பாகிஸ்த்தான்  கடற்படையினரால் கைப்றப்பட்டு, படகில் சென்ற ஐந்து மீனவர்களையும் அந்நாட்டு கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த மார்ஜ் மாதல் 26 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளனர் என தெரிய வந்துள்ளது.

குறித்த படகில் மீன் பிடிக்கச் சென்றவர்கள்  ஒரு நாள்விட்டு ஒருநாள் மிறிஸை மீன்பிடித் துறைமுகத்திடம் தொடர்பு கொண்டுள்ளனர். அதற்கமைய கடந்த மாதம் 5 ஆம் திகதி தமது படகை பாக்கிஸ்தான் கடற்படை படகு நெருங்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.

மறுநாள் தொடர்பு கொண்டபோது பாகிஸ்த்தான் கடற்படையினர் எம்மை கைது செய்து கரச்சி நகரத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள் என்றும் எம்மை விடுவிக்க வேண்டுமென்றால் நாங்கள் சென்ற படகின்  உரிமையாளர் பாகிஸ்த்தானுக்கு வருகைத்தர வேண்டும் என குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மீனவர்களின் குடும்பத்தினர் அது தொடர்பான தகவல்களை படகின் உரிமையாளரிடம் தெரிவித்த போது , சில ஆவணங்கள் தம்மிடம் இல்லையென குறிப்பிட்டு அவர் செல்ல மறுத்துள்ளார்.

பின் கடந்த 9 ஆம் திகதி குறித்த படகின் மேற்பார்வையாளராக செயற்பட்ட அமில சம்பத் எனப்படுபவர் தனது மனையுடன் தொடர்பை மேற்கொண்ட இன்று எமது வழக்கு விசாரிக்கப்படுகின்றது எம்மை காப்பாற்ற இலங்கையிலிருந்து யாராவது வருகை தந்திருக்கின்றார்களா என வினவியுள்ளார்.

மனைவியால் இல்லை என தெரிவிக்கப்பட்தும் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அதிலிருந்து இன்று வரையும் அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.