வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம்

297 0

வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை வடமாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகான கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்  வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த  79 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனக் கடிதத்தினை  வழங்கி வைத்தார்.

வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற வெற்றிடங்களுக்கு வழங்கப்பட்ட இந்த நியமனத்தில், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரியர்களாக 57 பேரும், விஞ்ஞான ஆசிரியராக  15 பேரும்,  விவசாய போதனாசிரியர் பயிற்சித்தரத்தில்  7 பேரும் நியமனத்தைப் பெற்றுக் கொண்டனர். இதில் 7 பயிற்சி சித்தர விவசாய போதனாசிரியார்களும் பயிற்சி காலத்தின் பின்னர் விவசாய போதனாசிரியர்களாக நியமிக்கப்படுவர் எனவும், நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்ட அனைவரும் நாளை மறுதினம் புதன்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் சத்தியசீலன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலர் பத்திநாதன்,வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் சத்தியசீலன்,திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.