பிலியந்தலை, ஜம்புரலிய, மடபாத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு இடையில் ஏற்பட்ட குழப்ப நிலை தீவிரமடைந்ததால் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தாக்குதலில் காயமடைந்த நபர் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மடபாத்த பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய உரக் களஞ்சியசாலையில் பணியாற்றும் தொழிலாளர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

