லசந்த படுகொலை ஹெந்தவிதாரணவிடம் 6 மணிநேரம் விசாரணை!

282 0

kapila-gamini-hendawitharanaசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்ட, மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டன.

சுமார் ஆறு மணிநேரம் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லசந்த விக்கிரமதுங்க படுகொலைச் சம்பவத்தின் பின்னணியில் சிறிலவங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவே இருந்ததாக கருதப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.