வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் – ரவீந்திர விஜேகுணரத்ன

321 0

வன்முறை சம்பவங்களினால் நாட்டின் பாதுகாப்பு  நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுகின்றது. இவ்வாறான  சந்தர்ப்பத்தில் பொய்யான பிரச்சாரங்களுக்கு முக்கியத்துவம்  கொடுக்க கூடாது. அதே சந்தர்ப்பத்தில்  பாதுகாப்பு த் துறையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவதுடன், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடவேண்டாம் என பாதுகாப்பு  படை பிரதானி அத்மிரால்  ரவீந்திர  விஜேகுணரத்ன தெரிவித்தார்.

 

நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு  கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சிலாபம், பிங்கிரிய பகுதிகளிலும் இன்று செட்டிகுளம் பகுதியிலும்  சிலதினங்களுக்கு  முன்னர் நீர்கொழும்பு பகுதியிலும் சில தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

நாட்டின்  அமைதியை குலைப்பதற்காகவும் படையினரால்  முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பங்கம்  விளைவிக்கும் வகையிலுமே இத்தகைய செயல்கள்  மேற்கொள்ளப்பட்டுகின்றன.

ஆகவே, இத்தகைய தாக்குதல் சம்பவங்களுக்கு துணைபோக  வேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.