இஸ்லாம் மத போதனைகளை சிங்கள மொழியில் நடத்த நடவடிக்கை-எம். எச். ஏ. எம். ஹலீம்

300 0

வௌ்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்களில் நடைபெறும் மத போதனைகளை அரபி மொழியிலல்லாமல், சிங்கள மொழியில் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு, முஸ்லிம் விவகார அமைச்சர் எம். எச். ஏ. எம். ஹலீம் தெரிவித்துள்ளார்.

குறித்த மத போதனைகளில் ஏனைய மதத் தலைவர்களையும் கலந்துக்​கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அமைச்சர் ஹலீம்,  அங்கு நடைபெறும் போதனைகள் தொடர்பான அறிக்கையை முஸ்லிம் விவகார அமைச்சர் என்ற ரீதியில் தன்னிடம் சமர்ப்பிக்குமாறும் முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.