சர்வதேச பயங்கரவாதிகளை இலங்கைக்குள் கட்டுப்படுத்தும் சட்டம் வேண்டுமா வேண்டாமா, பயங்கரவாதிகளுக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டுமா வேண்டாமா, இராணுவத்தினருக்கு அதிகாரத்தை கொடுப்பதற்கு ஆதரவா எதிர்ப்பா என்பதை ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவரும் அவர்களின் கட்சி உறுப்பினர்களும் அடுத்த வாரம் பாராளுமறத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல. இந்தியா மூன்று தடவைகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தும் தாக்குதலை தடுக்க முடியாமல் போனது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பினார்.
அரச தொழில் முயற்சிகள் அமைச்சில் இன்ற இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

