அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை இக்கட்டான சூழ்நிலையை அடைந்துள்ளது- ரணில்

211 0

கொள்கைகளின் அடிப்படையிலேயே தெற்கு மற்றும் வடக்கில் பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெற்றன. ஆயினும் தற்போது நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கான காரணம் தொடர்பில் தெளிவில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை இக்கட்டான சூழ்நிலையை அடைந்துள்ளது. மீண்டும் நாடு வழைமை நிலையை அடைய வேண்டுமானால் மக்களின் நம்பிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு வழ்பாடுகள் இடம்பெறும் விகாரகைளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெசாக் கொண்டாட்டங்கள் மற்றும் தான சாலைகள் அமைத்தல் தொடர்பில் பாதுகாப்பு துறையின் ஆலோசனைக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாடசாலைகளுக்கான விளையாட்டுத் துறை ஆரிசியர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட அமைச்சர்களான ரவூப் ஹகீம், ரஞ்சித் மத்தும பண்டார, அர்ஜூன ரணதுங்க ஆகியோரும் கலந்துக்கொண்டிரந்தனர்.