கிளிநொச்சி கூட்டுறவு சங்கத்திற்கு குளிர்களி இயந்திரம்(படங்கள்)

317 0

1கிளிநொச்சி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்திற்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.பசுபதிப்பிள்ளையால் இன்று குளிர்களி இயந்திம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான கிளிநொச்சி பொதுச் சந்தையில் அமைந்திருக்கும் காமதேனு பால்பொருள் உற்பத்தி நிலையத்திற்கே இவ்வாறு குளிர் களி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை உறுப்பினர் எஸ்.பசுபதிப்பிள்ளையின் 2016ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஒரு பகுதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட குறித்த இயந்திரம், இன்று உத்தியோகபூர்வமாக மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளையால் இயக்கி வைக்கப்பட்டது.

5