புலம்பெயர்ந்து வந்தவர்கள் தங்கள் தாய்மொழியில் அக்கறையாக உள்ளனர்: ஜெர்மன் அரசு!

1005 0

புலம்பெயர்ந்து வந்தவர்கள் தங்கள் தாய்மொழியில் அக்கறையாக உள்ளனர் என்று அரசு வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றின் மூலமாக புலப்படுகிறது.மில்லியன் கணக்கான ஜேர்மனியர்கள் வாசிப்பு மற்றும் எழுதுவதில் சிரமப்படுகிறார்கள் என்று அந்நாட்டில் எடுக்கப்பட்ட ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.2 மில்லியனுக்கு மேற்பட்ட வயத்துவந்தவர்கள் ஜெர்மன் மொழியில் எளிமையான நூல்களை படித்து எழுதுவதற்கு போராடுகிறார்கள் என்று தலைநகர் பேர்லினில் செவ்வாயன்று அரசு சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஎனினும் 2011ல் எடுக்கப்பட்டுள்ள ஆய்விலிருந்து இந்த தொகையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்,

இந்த ஆய்வின்படி (52.6%) சொத்த நாடடைச் ஜேர்மனிய மொழி பேசுபவர்கள் என்றும் மற்றும் 47.4% புலம் பெயர்ந்தோர் பின்னணி கொண்டவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.அதேவேளை புலம் பெயர்ந்தவர்கள் பின்னணியிலுள்ள 78% தங்கள் தாய் மொழியில் நூல்களை வாசித்து எழுதுவதற்கு ஏற்றவாறு இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்,

இந்த ஆய்வு 18 வயதிலிருந்து இருந்து 64 வயதிற்கு இடையில் சுமார் 7,200 ஜேர்மன் மொழி பேசக்கூடியவர்களிடம் 2018 ஆண்டு அரசாங்கம் எடுத்த ஆய்வுகளின்படியே என்று கூறப்படுகிறது.

இதில் கவனிக்கப்படவேண்டிய விடையம் என்னவெனில் 78% தங்கள் தாய் மொழியில் நூல்களை வாசித்து எழுதுவதற்கு ஏற்றவாறு இருக்கிறார்கள் என்பதில் நமது புலம்பெயர்ந்த தமிழர்களும் அடங்குவார்கள் என்பதும் அதிலும் அதிகப்படியான அளவில் இருப்பார்கள் ஏன்னெனில் தமிழாலயங்கள் எனும் பெயரில் ஜெர்மனின் அனைத்து மாநிலங்களிலும் தமிழ் பாடசாலைகள் இயங்கிவருகின்றது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். தகுதிவாய்ந்த ஆசிரியர்களால் நமது தாய்மொழி பயிற்றுவிக்கப்பட்டு ஆண்டுதோறும் பரீட்ச்சைகளும் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி பதிவு.